×

ஸ்பெயினின் அதிகரிக்கும் கொரோனா – அரசு அதிரடி நடவடிக்கை

கொரோனாவின் தாக்கம் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு அனைத்து நாடுகளிலும் கொரோனா அச்சம் தந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 856 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 64 ஆயிரத்து 520 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரத்து 568 நபர்கள். தற்போது
 

கொரோனாவின் தாக்கம் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு அனைத்து நாடுகளிலும் கொரோனா அச்சம் தந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 856 பேர்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 64 ஆயிரத்து 520 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரத்து 568 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 10,43,768 பேர்.

ஸ்பெயினில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவின் மொத்த பாதிப்பு 11 லட்சத்துக்கு 56 ஆயிரத்து 498. இவர்களில் 35,031 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். குணமடைந்தவர்களின் விவரங்கள் இல்லை.

ஸ்பெயினில், இந்த ஆண்டு பிப்ரவரி முதலே கொரோனா பாதிப்பு தொடங்கி விட்டது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று ஆகஸ்ட்டில் மீண்டும் இரண்டாம் அலையாய் அதிகரித்து வருகிறது.

இந்நிலையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் அவசரநிலை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொது இடங்களில் கூடுவதும், மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதும் தடுக்கப்படும். எனவே கொரோனா பரவல் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.