×

உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடக்கம்… குழப்பத்தில் மக்கள்!

இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளது அதன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகப்படியான நேரத்தை சமூக வலைத்தளங்களில் தான் செலவழித்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் தங்கள் கருத்துக்களை பகிர்வது, பிறர் கருத்துக்களுக்கு பதிலளிப்பது என்று விர்ச்சுவல் உலகம் தனியே இயங்கி வருகிறது. சொல்லப்போனால் ஒரு நாட்டின்
 

இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளது அதன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகப்படியான நேரத்தை சமூக வலைத்தளங்களில் தான் செலவழித்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் தங்கள் கருத்துக்களை பகிர்வது, பிறர் கருத்துக்களுக்கு பதிலளிப்பது என்று விர்ச்சுவல் உலகம் தனியே இயங்கி வருகிறது. சொல்லப்போனால் ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கே சமூக வலைத்தளங்கள் வித்திட்டுள்ளன.

மக்கள் தங்களின் வாழ்வை சமூக வலைத்தளங்களோடு இணைத்துக் கொண்ட இந்தக் காலத்தில் சிறிது நேரம் அவற்றைப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அது அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்கிறது. அவ்வப்போது சமூக வலைதளங்களின் பராமரிப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம்.

தற்போது இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.