×

’பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டாரா ராஜபக்‌ஷே?’ புதிய தகவல் சொல்லும் சிவாஜிலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கான சுய உரிமை கோரி பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர். தனி தமிழீழம் கோரிக்கையோடு ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகளுள் முதன்மையானது விடுதலைப் புலிகள். 2008 – 09 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஈழப் போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் கொல்லப்பட்டும் எஞ்சியவர் சிறைபிடிக்கவும் பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கூறியது. ஆயினும், தமிழர்களில் பெரும்பகுதியினர் அதை நம்பவில்லை.
 

இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கான சுய உரிமை கோரி பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர். தனி தமிழீழம் கோரிக்கையோடு ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகளுள் முதன்மையானது விடுதலைப் புலிகள்.

2008 – 09 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஈழப் போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் கொல்லப்பட்டும் எஞ்சியவர் சிறைபிடிக்கவும் பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கூறியது. ஆயினும், தமிழர்களில் பெரும்பகுதியினர் அதை நம்பவில்லை.

இலங்கையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் யாழ்பாணத்தில் அளித்த பேட்டியில் பல முக்கியமான செய்திகளைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் விடுதலைப் புலிகள் குறித்து பேசுகையில், ‘இது ஒரு தேசிய விடுதலை போராட்டம். அதனால் இதில் யாரும் பயங்கரவாதிகள் என்று கிடையாது. தேசத்திற்காக போராடிய போராட்டக்காரர்கள். வரலாற்றில் பலரும் இப்படித்தான் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாகக் குறித்து வைத்தது. நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று சொல்லிதான் 27 ஆண்டுகள் சிறையில் அடைத்தார்கள். வெளியே வந்தவர் நாட்டின் ஜனாதிபதியாக ஆனார்’ என்றார்.

மேலும், “புலிகளுடையது பயங்கரவாதம் என்றால், இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க அவர்கள், தேசிய தலைவர் பிரபாகரனுடன் 2002 ஆம் ஆண்டு 22-ம் தேதி 2-ம் மாதத்தில் ஏன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆகவே அது ஒரு விடுதலைப் போராட்டம்” என்றவர் தொடர்ந்து,

’நார்வே நாட்டின் சமாதார தூதுவர் எரிக் சொல்கிம்கூட, பிரபாகரன் தமது படைகளை தனது கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருந்தார். எங்களுக்குக்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்றே கூறியுள்ளார்.  பிரபாரகன் பயங்கரவாதி என்றால், இப்போது பிரதமராக இருக்கும் ராஜபக்‌ஷே, பிரபாகரனை சந்திக்க விரும்பியது ஏன்?’ என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்.