×

61 பேர் கொல்லப்பட்ட செஞ்சோலை படுகொலை – நினைவு நிகழ்வு நடத்த அனுமதி மறுப்பு

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது என்றதுமே 2008 -09 ஆண்டுகளில் நடந்த போரே பலருக்கு நினைவுக்கு வரும். இலங்கை, முல்லைத் தீவு பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்தது. இங்கு விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கருதிய இலங்கை ராணுவம் அதன் மீது 2006 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதியன்று தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர். இதில் அனைவருமே மாணவிகள் என்றும் ஒரு சிலர் பெரியவர்கள் மற்றவர்கள் மாணவிகள் என்றும் கூறப்படுகிறது. ஆயினும்
 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது என்றதுமே 2008 -09 ஆண்டுகளில் நடந்த போரே பலருக்கு நினைவுக்கு வரும்.

இலங்கை, முல்லைத் தீவு பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்தது. இங்கு விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கருதிய இலங்கை ராணுவம் அதன் மீது 2006 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதியன்று தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர். இதில் அனைவருமே மாணவிகள் என்றும் ஒரு சிலர் பெரியவர்கள் மற்றவர்கள் மாணவிகள் என்றும் கூறப்படுகிறது.

ஆயினும் இந்தத் தாக்குதல் உலகில் உள்ள தமிழர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. தமிழகத்தில் இருந்தும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களும் இப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதி செஞ்சோலை நிலையம் அமைந்த இடத்தில் நினைவு நிகழ்வை நடத்தப்படுவது வழக்கம். அப்போது அங்கு கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை வைத்து நினைவு தீபம் ஏற்றுவார்கள். பலரும் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன்படி நாளைய நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அங்கிருந்தவர்கள் செய்துவந்தனர். ஆனால். காவல் துறையினர் நிகழ்வு நடத்த அனுமதி மறுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.