×

இந்த நாட்டில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் இலவசம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் இலவசமாக அரசு தருகிறது. ஆனால், அவை பள்ளி மாணவிகளுக்கு மட்டும்தான். பெண்களின் உடல் சுகாதரத்தை சீராக வைத்துக்கொள்வதற்கு மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்படி மருத்துவர்கள் தொடர்ந்து அறிவிறுத்தி வருகிறார்கள். ஆனால், பல நாடுகளில் சானிட்டரி நாப்கின் வாங்க செலவழிப்பதற்கு தயக்கம் அல்லது இயலாமை சூழலே நிலவுகிறது. ஆனால், உலகில் முதன்முதலாக ஒரு நாட்டில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் இலவசமாகக் கொடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இது உண்மையில் ஆச்சர்யமான
 

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் இலவசமாக அரசு தருகிறது. ஆனால், அவை பள்ளி மாணவிகளுக்கு மட்டும்தான்.

பெண்களின் உடல் சுகாதரத்தை சீராக வைத்துக்கொள்வதற்கு மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்படி மருத்துவர்கள் தொடர்ந்து அறிவிறுத்தி வருகிறார்கள். ஆனால், பல நாடுகளில் சானிட்டரி நாப்கின் வாங்க செலவழிப்பதற்கு தயக்கம் அல்லது இயலாமை சூழலே நிலவுகிறது.

ஆனால், உலகில் முதன்முதலாக ஒரு நாட்டில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் இலவசமாகக் கொடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இது உண்மையில் ஆச்சர்யமான செய்திதான்.

ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோனிகா லெனான் எனும் எம்பி ஒரு மசோதாவை முன்மொழிந்தார். அதன் சாரம் என்னவெனில், ‘குறைவான பொருளாதாரம் எனும் ஒரு காரணத்தால் நாட்டில் பல பெண்கள் சானிட்டரி நாப்கின் வாங்குவதில் சிரமம் இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வாக நாடு முழுக்க சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும்’ என்பதுதான்.

Monica Lennon

இந்த முன்மொழிவை யார்தான் எதிர்ப்பார்? அதனால், அனைவரின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் வென்றது. அதனால், ஸ்காட்லாந்து நாட்டில் பொது இடங்களில், கல்விக்கூடங்களில், அலுவலகங்களில் என பெண்கள் கூடும் இடங்களில் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கப்படும் என்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.