×

110 பேருடன் ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கியது!

 

அஜர்பைஜானில் இருந்து 110 பேருடன் ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கியது.

அஜர்பைஜானில் இருந்து 110 பேருடன் ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கியது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அசர்பைஜானின் பாகுவில் இருந்து ட்ரோஸ்னி சென்ற பயணிகள் விமானம் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க கோரிவிட்டு வானில் வட்டமடித்து வந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.