×

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி : சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு, 1,73,13,163 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 2,812 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குணமடைந்தோர்
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு, 1,73,13,163 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 2,812 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,04,382 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,13,658 ஆகவும் உள்ளது. அதேபோல் இதுவரை 14,19,11,223 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் 19 நெருக்கடி கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ .135 கோடி நிதியை வழங்குகிறது. மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம், ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி நிதியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.