×

அப்போ பாஜகவ எதிர்த்து கேள்வி கேட்டா பயங்கரவாதியா? – பாஜகவின் முரட்டு பக்தர்கள் அடாவடி!

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பிய ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானாவுக்கு முஸ்லீம் பயங்கரவாதி பட்டத்தைக் கொடுத்துள்ளனர் பாஜக முரட்டு பக்தர்கள். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர். குடியரசு தின டிராக்டர் பேரணி ஒருசிலரால் வன்முறையாகத் திசைமாற்றப்பட்டது. அதனைக் காலாகப் பிடித்துக்கொண்டு விவசாயிகளை டெல்லியின் எல்லைகளை விட்டு விரட்டும் வேலையில் மத்திய அரசின் டெல்லி போலீஸ் களமிறங்கியிருக்கிறது. சாலைகளில் முள்வேலி, முள்பலகை, தடுப்பரண்கள் என நாட்டின் எல்லையில் பாதுகாப்பு போடப்படுவதைப் போன்று
 

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பிய ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானாவுக்கு முஸ்லீம் பயங்கரவாதி பட்டத்தைக் கொடுத்துள்ளனர் பாஜக முரட்டு பக்தர்கள்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர். குடியரசு தின டிராக்டர் பேரணி ஒருசிலரால் வன்முறையாகத் திசைமாற்றப்பட்டது. அதனைக் காலாகப் பிடித்துக்கொண்டு விவசாயிகளை டெல்லியின் எல்லைகளை விட்டு விரட்டும் வேலையில் மத்திய அரசின் டெல்லி போலீஸ் களமிறங்கியிருக்கிறது.

சாலைகளில் முள்வேலி, முள்பலகை, தடுப்பரண்கள் என நாட்டின் எல்லையில் பாதுகாப்பு போடப்படுவதைப் போன்று டெல்லி எல்லைகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஹரியானாவில் 22 மாவட்டங்களிலும் டெல்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஸிப்பூரிலும் இணைய சேவையைத் துண்டித்துள்ளனர். விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளுக்கும் தடா போட்டுள்ளனர். அப்பகுதிகளில் மீடியாக்கள் செல்லவும் அனுமதி வழங்காமல் தவிர்த்துவருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றாலும், உலகளவில் அவ்வளவு கவனம் பெறவில்லை. இச்சூழலில் ஹாலிவுட் நடிகை ரிஹானா, இதுதொடர்பான செய்தியைப் பகிர்ந்து ஏன் இந்தியாவைத் தவிர உலகளவில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பப்படவில்லை என்று கேட்டிருக்கிறார். உள்ளூர்காரர்கள் பாஜகவை குற்றஞ்சாட்டினாலே அவர்களைத் பயங்கரவாதிகள், குண்டுவைப்பவர்கள் என்ற ரேஞ்சுக்கு திட்டி தீர்த்துவிடுவார்கள் பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள். ரிஹானா வேறு வெளியூர்காரர். அவருக்கும் ஒரு ஐஎஸ் தீவிரவாதி பட்டத்தை பார்சல் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

https://twitter.com/theFalgunshah/status/1356674807627214853

ரிஹானாவுக்கும் பாகிஸ்தான் அமைச்சர் சுல்பிகார் பொகாரிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, அவரை இந்த ட்வீட்டை போட வைத்ததே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தான் என்று பாஜகவின் உளவுத்துறை ஆதரவாளர்கள் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான பாடகி ரிஹானா. அவர் படத்தில் ஒரு பாடல் பாடினாலே கோடிகளில் புரளலாம். ஆனால், அவர் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கி ட்வீட் போட்டிருக்கிறார் என்று இவர்கள் உட்டான்ஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக ட்வீட் செய்வதைப் போல ரிஹானுவும் செய்கிறார் என்று நினைத்துவிட்டார்கள் போலும். “அந்தளவுக்குலாம் நான் சோத்துக்கு செத்து போய் கிடக்கலடா” என்பதே ரிஹானாவின் மனக்குரலாக இருக்கும். ‘ரிஹானாவின் மதம் என்ன’ என்பது கடந்த சில மணி நேரங்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கீவேர்டாக இருக்கிறது.