×

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் காலமானார்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் மன்னருமான பிலிப்(99) கடந்த 2017ம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு உடல்நலம் குன்றியது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மன்னர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்துக் வந்தார். இந்த நிலையில், இன்று மன்னர் பிலிப் வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ராணியின் பிரியமான கணவர் தி
 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் மன்னருமான பிலிப்(99) கடந்த 2017ம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு உடல்நலம் குன்றியது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மன்னர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்துக் வந்தார்.

இந்த நிலையில், இன்று மன்னர் பிலிப் வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ராணியின் பிரியமான கணவர் தி பிரின்ஸ் பிலிப் உயிரிழந்ததை ராணு வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1947 ஆண்டு மன்னர் பிலிப்புக்கும் ராணி எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் இளவரசராக இருந்தவர் மன்னர் பிலிப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.