×

8 நாட்கள் துக்கம் நிறைவு… விடைபெற்றார் பிரிட்டன் இளவரசர் பிலிப்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப் (99) கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காலமானார். 2017ஆம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி அவர் மரணமடைந்தார். 1947ஆம் ஆண்டு பிலிப்புக்கும் ராணி எலிசபெத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 4 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள்
 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப் (99) கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காலமானார். 2017ஆம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி அவர் மரணமடைந்தார்.

1947ஆம் ஆண்டு பிலிப்புக்கும் ராணி எலிசபெத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 4 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் இளவரசராக இருந்தவர் பிலிப் தான் என்பது கவனத்துக்குரியது. அவர் இறந்த பின்பு பிரிட்டன் முழுவதும் எட்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

துக்க நாள் முடிவடைந்துவிட்டதால் இளவரசரின் உடல் வின்சர் கோட்டையிலிருந்து ஊர்வலமாக தேவாலயத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் காரணமாக 30 பேர் மட்டுமே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்ததையடுத்து தேவாலயத்திலுள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.