×

இளவரசர் – இளவரசி இருவருக்கும் கொரோனா – எந்த நாட்டில் தெரியுமா?

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. இதனால், கொரோனா புதிய தொற்றுகள் கணக்கில் அடங்கா வண்ணம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 13 லட்சத்து 08 ஆயிரத்து 613 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரத்து 651 நபர்கள்.
 

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. இதனால், கொரோனா புதிய தொற்றுகள் கணக்கில் அடங்கா வண்ணம் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 13 லட்சத்து 08 ஆயிரத்து 613 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரத்து 651 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 37 ஆயிரத்து 840 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,74,74,122 பேர்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு கொரோனா தொற்று பரவியது. அவருக்கு மட்டுமல்ல, அவரின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷீஸ்டினுக்கு கொரோனா பாதித்தது. பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையால் நலம்பெற்று வந்தார். இப்படி பல நாட்டு அதிபர், பிரதமர்களுக்கும் கொரோனா தொற்று வந்து சென்றுள்ளது.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் இளவரசர் – இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஸ்வீடன் நாட்டு அரசக் குடும்பத்தில் சமீபத்தில் மறைந்த ஒருவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு எல்லோரும் சென்றிருந்தனர்.

கொரோனா பரவல் நேரத்தில் கட்டுப்பாடுகளோடு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், அதில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அப்போது நெகட்டிவ் என வந்திருந்தது.

ஆனால், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் தீவிர அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.