“சவுதி அரேபியாவில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாப்பதற்கு நன்றி”- இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சவுதி அரேபியா மீதான சமீபத்திய தாக்குதல்களை பிரதமர் வன்மையாகக் கண்டித்ததுடன், இத்தகைய நிகழ்வுகள் அந்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகக் குறிப்பிட்டார். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த சவாலான காலங்களில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, பிரதமர், பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் விவாதித்தேன். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் சமீபத்திய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிகவும் அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்தத் கடினமான நேரத்தில் இந்திய சமூகத்தினரின் நலனைப் பாதுகாப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.