×

திரண்ட மக்கள்… பயந்து பதவியை ராஜினாமா செய்த கிர்கிஸ்தான் அதிபர்

அக்டோபர் 4-ம் தேதி கிர்கிஸ்தான் நாட்டில் தேர்தல் நடந்தது. வழக்கமாகப் பதிவாகும் ஓட்டு சதவிகிதத்தை விட அதிகளாவில் 98 சதவிகிதம் எனும் அளவில் வாக்குகள் பதிவாகின. இவ்வளவு சதவிகித வாக்குகளா என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் இன்னும் ஆச்சர்யம் காத்திருந்தது. 120 தொகுதிகள் கொண்ட தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாக்கு சதவிகிதத்தைப் பெற வில்லை. இந்த நிலையில் வெறும் 7 சதவிகித ஓட்டுகளை
 

அக்டோபர் 4-ம் தேதி கிர்கிஸ்தான் நாட்டில் தேர்தல் நடந்தது. வழக்கமாகப் பதிவாகும் ஓட்டு சதவிகிதத்தை விட அதிகளாவில் 98 சதவிகிதம் எனும் அளவில் வாக்குகள் பதிவாகின.

இவ்வளவு சதவிகித வாக்குகளா என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் இன்னும் ஆச்சர்யம் காத்திருந்தது.

120 தொகுதிகள் கொண்ட தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாக்கு சதவிகிதத்தைப் பெற வில்லை.

இந்த நிலையில் வெறும் 7 சதவிகித ஓட்டுகளை மட்டுமே பெற்ற நான்கு கட்சிகள் சேர்ந்து எப்படியோ ஆட்சியைப் பிடித்துவிட்டன. அந்த நாட்டின் அதிபராக சூரேன்பாஜ் ஜீன்பெகோவ் தேர்ந்தெடுப்பட்டு, பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நான்கு கட்சிகளின் செயல்களை மற்ற கட்சிகளைக் கோபத்தின் உச்சிக்கு ஏற்றின. கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

மக்களைத் திரட்டி பெரும் போரட்டத்தை நடத்தின. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கடுமையான காயப்பட்டனர். இது இன்னும் அம்மக்களை வேதனைப்படுத்தின.தலைநகரில் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் தீர்மானித்தன.

இது நடந்தல் நிச்சயம் பெருமளவில் சேதம் ஏற்படும், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு கூட நடத்த வேண்டியிருக்கும். அப்படி நடத்தப்பட்டால் இது சர்வதேச அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடக்க்கூடும் என, அதிபர் ஜீன்பெகோவ் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.

கிர்கிஸ்தானில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும் என்றதுமே நிலைமை சற்று இயல்பை நோக்கித் திரும்பிவருகிறது.