போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்
Feb 23, 2025, 10:26 IST
கடந்த 24 மணி நேரத்தில் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 14 ம் தேதி முதல் போப் ஆண்டவர் வாடிகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
போப் ஆண்டவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையிலும், போப் ஆண்டவரின் உடல்நிலை பின்னடைவை அடைந்தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.