×

ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்..!!

 


 

ரஷ்யாவில் 50 பாணிகளுடன் சென்ற விமானம் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.  

சீன எல்லையோர டிண்டா நகரத்திற்குச் சென்ற விமானம் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. வானில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்கும், கட்டுபாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   


ரஷ்ய - சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டிண்டா நகருக்குச் சென்ற விமானத்தில் 5 குழந்தைகள், 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர் என மொத்தம் 50 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்த விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரேடாரிலிருந்து மாயமாகியுள்ளது.  டிண்டா விமான நிலையத்தை நெருங்கும் தருவாயில் விமானத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டதில் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.  

 இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் எரிந்த பாகத்தை, மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்ட்ர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசாகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.