×

கராச்சியில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து என தகவல் – 91 பயணிகள் கதி என்ன?

பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து புறப்பட்ட இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விமானத்தில் சுமார் 91 பயணிகளை பயணம் செய்ததாகவும், அது ஒரு ஏர்பஸ் ஏ320 விமானம் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து தற்போதைக்கு எந்த தகவலும் அந்நாட்டு ஊடகங்கள் அல்லது அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. Dark plumes of smoke seen near the
 

பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து புறப்பட்ட இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த விமானத்தில் சுமார் 91 பயணிகளை பயணம் செய்ததாகவும், அது ஒரு ஏர்பஸ் ஏ320 விமானம் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து தற்போதைக்கு எந்த தகவலும் அந்நாட்டு ஊடகங்கள் அல்லது அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

கராச்சி விமான நிலையத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஜின்னா கார்டன் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பல வீடுகள் தீப்பிடித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வீடியோக்களை வெளியிட்டுள்ளன. இதனால் அதிக அளவில் புகை வானத்தில் வெளியேறுவதை காண முடிகிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரும், மீட்பு குழுவை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.