×

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

மணிலா: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்று அந்நாட்டு மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு
 

மணிலா: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்று அந்நாட்டு மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று பெரும்பாலான வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் மாத இறுதியில் ஆன்லைன் அல்லது தொலைக்காட்சி வகுப்புகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இணைய அணுகல் இல்லாத ஏழ்மையான அல்லது தொலைதூர சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியை தவற விடும் அபாயம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் நேற்று 579 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 22,474-ஆக அதிகரித்துள்ளன. இதுவரை அந்நாட்டில் 1,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.