×

பாகிஸ்தான் விமான விபத்து: கொரோனா பற்றி விமானிகள் மும்முரமாக பேசிக் கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்தது

கராச்சி: பாகிஸ்தான் விமான விபத்துக்கு அந்த விமானத்தை இயக்கிய விமானிகளின் அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளது. கடந்த மே 22-ஆம் தேதி கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே ஏர்பஸ் ஏ-320 பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விமானத்தில் பயணித்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானத்தின் உயரம்
 

கராச்சி: பாகிஸ்தான் விமான விபத்துக்கு அந்த விமானத்தை இயக்கிய விமானிகளின் அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளது.

கடந்த மே 22-ஆம் தேதி கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே ஏர்பஸ் ஏ-320 பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விமானத்தில் பயணித்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானத்தின் உயரம் மற்றும் வேகத்தை குறைக்குமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானியிடம் மூன்று தடவை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அவற்றை புறக்கணித்த அவர், தனக்கு விமானத்தின் கட்டுப்பாடு திருப்தி அளிப்பதாகவும் நிலைமையை கையாள முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் எஞ்சின் செயலிழந்த காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதேபோல இந்த விமான விபத்துக்கான இன்னொரு காரணமும் தெரியவந்துள்ளது. அதாவது விமானம் தரையிறங்குவதற்கு முன்பு விமானிகள் இருவரும் விமானத்தை செலுத்துவதில் கவனம் செலுத்தாமல், கொரோனா பற்றி மும்முரமாக பேசிக் கொண்டு வந்துள்ளனர். எனவே விமானிகளின் அலட்சியப் போக்கால் 97 பேரின் உயிர் காற்றில் கரைந்தது. மற்றபடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் இல்லை எனவும், அந்த விமானம் விண்ணில் பறப்பதற்கு 100 சதவீதம் தகுதியாக இருந்தது எனவும் விமான அதிகாரிகள் கூறியுள்ளனர்.