×

உலகளவில் கொரோனாவால் இறந்த பத்து நபர்களில் ஒருவர் இந்தியர்

அக்டோபர் 03-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 366 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 58 லட்சத்து 95 ஆயிரத்து 824 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 27
 

அக்டோபர் 03-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 366 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 58 லட்சத்து 95 ஆயிரத்து 824 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 27 ஆயிரத்து 780 பேர்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 79,02,304 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 75,49,323 பேரும், இந்தியாவில் 64,47,544 பேரும், பிரேசில் நாட்டில் 48,82,231 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 51,403 பேரும், பிரேசிலில் 33,002 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 79,974 பேராக அதிகரித்துள்ளனர். இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது.

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் 864, பிரேசிலில் 664, இந்தியாவில் 1,071 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,00,875 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

உலகளவில் 10 லட்சம் பேர் பலி. இந்தியாவில் ஒரு லட்சம் பேர் பலி. ஆக, உலகளவில் இறந்தவர்களில் பத்தில் ஒருவர் இந்தியர்.