×

நிலச்சரிவினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி - பிரதமர் மோடி இரங்கல்!!

 

ஆஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. இதில் பலர் மண்ணில் புதையுண்டனர். இனத்தில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாகின. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது சமூகவலைத்தள பக்கத்தில், பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார்.