×

’ராகுல் காந்திக்கு ஏன் சோனியா பிரதமர் பதவி தரவில்லை?’ காரணம் சொல்லும் ஒபாமா!

ராகுல்காந்தி குறித்து ஒபாமாவின் கருத்து கடந்த சில நாட்களாக விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. முதலில், நடந்த விஷயங்களைப் பின்னோக்கிச் செல்வோம். இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி வென்றிருந்தாலும், சோனியா காந்தியை பிரதமராக பதவி ஏற்பதில் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவித பதற்ற நிலைக்கு சூழலை மாற்ற முயன்றார்கள். அதனால், வேறு ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தது. சோனியா தம் மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் கோரினர்.
 

ராகுல்காந்தி குறித்து ஒபாமாவின் கருத்து கடந்த சில நாட்களாக விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. முதலில், நடந்த விஷயங்களைப் பின்னோக்கிச் செல்வோம். இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி வென்றிருந்தாலும், சோனியா காந்தியை பிரதமராக பதவி ஏற்பதில் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவித பதற்ற நிலைக்கு சூழலை மாற்ற முயன்றார்கள். அதனால், வேறு ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தது.

சோனியா தம் மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் கோரினர். ஆனால், அதைத் தவிர்த்து மன்மோகன் சிங்கைப் பிரதரமராக்கினார் சோனியா காந்தி. இதன் பின்னணியை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது ’The Promised Land’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

’ராகுல் காந்தி பிரதமராக ஆக வில்லை எனில், அவருக்கு அரசியல் தொடர்பான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் இருக்காது என்பதாலும், ராகுல் காந்தியை அரசியலில் வளர்த்தெடுக்கும் நோக்கத்தினாலும் மன்மோகன் சிங்கை பிரதமாக்கினார்’ என்பதாக ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

சோனியா காந்தி தம் கணவரை, மாமியாரை பயங்கரவாதத்திற்கு பலிகொடுத்தவர். அதனால், ஒபாமா சொல்வதைப் போல நினைதிருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், ‘ராகுல் காந்தி பதற்றமானவர். அரசியல் கொள்கைகளை ஒரு மாணவரைப் போல மனப்பாடம் செய்ய நினைத்தவர்’ என்று ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.