×

’இலங்கைக்குள் இந்தியர்கள் யாரும் வரவில்லை’ அந்நாட்டு அமைச்சர் சொல்வது எதற்காக?

கொரோனா தொற்று நாட்டில் தொடங்கும்போது முன்னெச்சரிக்கையோடு தங்களைத் தற்காத்துக்கொண்ட நாடுகள் சில. அவற்றில் இலங்கையும் உண்டு. இலங்கையில் தற்போது மொத்த பாதிப்பு 5,625. இவர்களில் 3440 பேர் குணமடைந்துவிட்டனர். 13 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இலங்கை நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சமீப சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகமளவில் அதிகரித்த எண்ணிக்கை. நேற்று (அக்டோபர்
 

கொரோனா தொற்று நாட்டில் தொடங்கும்போது முன்னெச்சரிக்கையோடு தங்களைத் தற்காத்துக்கொண்ட நாடுகள் சில. அவற்றில் இலங்கையும் உண்டு.

இலங்கையில் தற்போது மொத்த பாதிப்பு 5,625. இவர்களில் 3440 பேர் குணமடைந்துவிட்டனர். 13 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

இலங்கை நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சமீப சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகமளவில் அதிகரித்த எண்ணிக்கை. நேற்று (அக்டோபர் 19) அன்று மட்டும் 87 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இலங்கை கொழும்பு நகரின் முக்கிய சந்தையில் பணிபுரியும் ஒருவரின் உறவினருக்கு கொரோனா என்றதும். அந்தச் சந்தையே மூடபட்டது. சினிமா தியேட்டர்களும் இம்மாத இறுதிவரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ‘இலங்கையில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசுவதற்கு மத்தள விமான நிலையம் வழியாக 20க்கும் மேற்பட்டோரை ஒரு நிறுவனம் வேலைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்ய வில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இக்கேள்விக்கு இலங்கையில் கைத்தொழில் அமைச்சர் விமர் வீரவங்ச, “கொரோனா நோய்த் தொற்று பரவல் இலங்கையில் தொடங்கியதிலிருந்து எவ்வித பணிகளுக்கும் இந்தியர்கள் இலங்கைக்கு வர அனுமதி கொடுக்கப்பட வில்லை என்று தெரிவித்திருக்கிறார்.