×

தயவுசெஞ்சி இங்க வந்திராதீங்க… இந்தியர்களுக்கு தடை போட்ட நியூஸிலாந்து!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 685 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. அங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து
 

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 685 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. அங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், “இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கிறோம். இந்தியாவில் இருக்கும் நியூசிலாந்து குடிமக்களுக்கும் இது பொருந்தும். அவர்களுக்கும் நியூசிலாந்து திரும்ப தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது. நியூசிலாந்தில் நேற்று மட்டும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 17 பேர் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள். இதன் காரணமாகவே தற்போது இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதற்குப் பின் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.