×

நியூயார்க்கில் ஊரடங்கு உத்தரவு – சொகுசு கடைகளை இளைஞர்கள் கொள்ளையடிப்பதால் நடவடிக்கை

நியூயார்க்: சொகுசுக் கடைகளை இளைஞர்கள் கொள்ளையடிப்பதால் நியூயார்க் நகரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சில சொகுசுக் கடைகளை இளம் வயதினர் சூறையாடத் தொடங்கியதால் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கும் இளம் வயதினர் நியூயார்க் நகரில் ஒவ்வொரு பகுதியாக குறிவைத்து அங்குள்ள சொகுசுக் கடைகளில் விலை மதிப்புள்ள
 

நியூயார்க்: சொகுசுக் கடைகளை இளைஞர்கள் கொள்ளையடிப்பதால் நியூயார்க் நகரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சில சொகுசுக் கடைகளை இளம் வயதினர் சூறையாடத் தொடங்கியதால் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கும் இளம் வயதினர் நியூயார்க் நகரில் ஒவ்வொரு பகுதியாக குறிவைத்து அங்குள்ள சொகுசுக் கடைகளில் விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.

இவர்களை தடுக்க போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் அதற்குள் பல பேர் விலை மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு விருட்டென காரில் தப்பித்து சென்று விடுகின்றனர். இவ்வாறு பல கடைகள் சூறையாடப்பட்டுள்ளதாக நியூயார்க் போலீசார் கூறியுள்ளனர். மக்கள் சொகுசுக் கடைகளில் விலை மதிப்புள்ள பொருட்களை திருடிச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.