×

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொரோனாவின் ஆபத்தே இன்னும் முடியவில்லை. சொல்லப்போனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் புதிய வைரஸ் பரவி வருகிறது. சென்ற ஆண்டு டிசம்பர் சீனாவின் வூகான் நகரில் தொடங்கியது கொரோனா ஆபத்து. அங்கிருந்து உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் இதன் தாக்கம் தெரிந்தது. அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டாலும் புதிய நோய்த் தொற்று குறையவில்லை. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 6 லட்சத்து 97 ஆயிரத்து 734
 

கொரோனாவின் ஆபத்தே இன்னும் முடியவில்லை. சொல்லப்போனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் புதிய வைரஸ் பரவி வருகிறது.

சென்ற ஆண்டு டிசம்பர் சீனாவின் வூகான் நகரில் தொடங்கியது கொரோனா ஆபத்து. அங்கிருந்து உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் இதன் தாக்கம் தெரிந்தது. அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டாலும் புதிய நோய்த் தொற்று குறையவில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 6 லட்சத்து  97 ஆயிரத்து 734 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 889 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 56 ஆயிரத்து 444 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,01,399 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 69,25,941 பேரும், இந்தியாவில் 53,08,014 பேரும், பிரேசில் நாட்டில்  44,97,434 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்

இந்நிலையில் சீனாவில் புருசெல்லா எனும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவில் கன்சு மாநிலத்தில் உள்ள ஓரு ஆய்கத்தின் வழியாக இது பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மனிதர்களுக்கு எளிதாகப் பரவாது என்று ஆறுதல் அளித்தாலும், பாக்டீரியா உள்ள சாப்பாடுகளைச் சாப்பிட்டாலும் செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.

இதுவரை சீனாவில் 3200 பேர் புருசெல்லா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா போல புருசெல்லாவையும் உலகம் முழுக்க பரவ விடாமல் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்.