×

"திடீரென நீல கலரில் மாறும் உதடு, நகம், தோல்" - ஒமைக்ரானின் "அபாய" அறிகுறி... கவனமா இருங்க!

 

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரே வார்த்தை ஒமைக்ரான். தமிழ்நாட்டு மக்களும் பீதியில் தான் இருக்கின்றனர். காரணம் கடந்த ஒரு வார காலமாக உயர்ந்துகொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. ஒமைக்ரான் நினைத்ததை விட அதிவேகமாகப் பரவுகிறது. அனைவரது வீட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வந்துவிட்டே செல்லும் என சொல்லப்படுகிறது. ஆகவே அதிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரேயொரு விஷயம் மட்டும் தான் செய்ய வேண்டும். அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொள்வது.

எவ்வளவு சீக்கிரம் பரிசோதனை செய்துகொள்கிறாமோ அவ்வளவு விரைவாகவே நாம் குணமடைந்துவிடலாம். பரிசோதனையில் தொற்று உறுதியானால் அதற்கேற்ப சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு பூரண குணமடையலாம். ஆனால் இதற்கெல்லாம் அறிகுறிகள் என்னென்ன நாம் தெரிந்துகொள்வதும் அவசியம். ஒமைக்ரானை பொறுத்தவரை ஆரம்பத்தில் மற்ற கொரோனா உருமாற்றங்கள் ஏற்படுத்திய அறிகுறிகளை தான் உண்டாக்கியது. ஆனால் தற்போது புதிய அறிகுறிகளும் தென்படுகின்றன.

தலைவலி, இருமல், சளி பிரச்சினை, வறட்சியான தொண்டை, உடல் சோர்வு,  காய்ச்சல், சதைகள், மூட்டுகளில் கடும் வலி ஆகியவை பொதுவான அறிகுறிகள். புதிதாக வாந்தி, பசியின்மையும் இணைந்துகொண்டன. ஆனால் வழக்கமான சுவை, மணம் இழப்பு ஒமைக்ரானால் ஏற்படுவதில்லை. இச்சூழலில் நகம், தோல், உதடுகளில் அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (சிடிசி) அறிவித்துள்ளது. அதன்படி ஒமைரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல், உதடு, நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். தோல் வெளுத்து போகும் வாய்ப்புள்ளது. சிலருக்கு தோல் நீல நிறத்திற்கு மாறலாம். உதடு, நகம் ஆகிவையும் வெளுத்து போகவோ, நீல நிறத்திற்கு மாறலாம்.

அதாவது வெள்ளை நிற தோல் கொண்டவர்களுக்கு நீல நிறமாகவும் கருப்பு நிற தோல் கொண்டவர்களுக்கு வெளுத்துப் போனது போலவும் மாறலாம். உடலில் ஆக்சிஜன் குறைந்தால் தான் இம்மாதிரியான அறிகுறி தென்படும். ஆகவே இந்த அபாய அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவமனையை நாட வேண்டும். இந்த அறிகுறி தென்பட்ட பின்னர் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் நிலைமை தீவிரமாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதுதவிர மனக்குழப்பம், உறக்கத்தில் சிக்கல் போன்ற அறிகுறிகளும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.