×

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவருக்கு புதிய நிபந்தனை

கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஆனால், சில நாடுகள் இந்நோய்த் தொற்று தங்கள் நாட்டில் பரவத் தொடங்கியதுமே உஷாராகி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி தங்களைத் தற்காத்துக்கொண்டன. அவற்றில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் தற்போது மொத்த பாதிப்பு 5,427. இவர்களில் 3395 பேர் குணமடைந்துவிட்டனர். 13 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இலங்கையில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சமீப சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா
 

கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஆனால், சில நாடுகள் இந்நோய்த் தொற்று தங்கள் நாட்டில் பரவத் தொடங்கியதுமே உஷாராகி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி தங்களைத் தற்காத்துக்கொண்டன. அவற்றில் இலங்கையும் ஒன்று.

இலங்கையில் தற்போது மொத்த பாதிப்பு 5,427. இவர்களில் 3395 பேர் குணமடைந்துவிட்டனர். 13 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

இலங்கையில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சமீப சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகமளவில் அதிகரித்த எண்ணிக்கை. நேற்று (அக்டோபர் 16) அன்று மட்டும் 110 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரத்தைக் காட்டத் தொடங்கி விட்டது இலங்கை அரசு. அவற்றுள் ஒன்றாக, வெளிநாடு செல்லும் இலங்கை பயணிகளுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

அதன்படி, இலங்கையிலிருந்து எந்த நாட்டுக்குச் செல்பவராக இருந்தாலும், அவர் விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்த நிபந்தனை நாளையிலிருந்து அமல் படுத்தப்படும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் அவர்களின் பயணம் செய்வது தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிகிறது.