×

”கொரோனாவால் எஜமானி இறந்துட்டாரு – எனக்கு உதவுங்க” !-கழுத்தில் பரிதாப வாசகத்துடன் சுற்றித்தரியும் நாய்

கொரோனா காரணமாக என் எஜமானி இறந்துவிட்டதால் தான் ஆதரவின்றி அனாதையாகிவிட்டேன்.. ஆகவே எனக்கு உதவுங்கள் என கழுத்தில் வாசகம் பொருந்திய அட்டையை அணிந்த படி பெரு நாட்டின் தெருவில் சுற்றித்திரிந்த நாய் பலரின் பரிதாபத்தை பெற்றுள்ளது. பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் உள்ள கடைவீதி ஒன்று உள்ளது. அதே பகுதியில் கடை வைத்திருந்த ஒருவர் செஸ்டர் என்ற நாயை வளர்த்து வந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துள்ளார். இதனால் ஆதரவின்றி அந்த நாய் அங்கும் இங்குமாக
 

கொரோனா காரணமாக என் எஜமானி இறந்துவிட்டதால் தான் ஆதரவின்றி அனாதையாகிவிட்டேன்.. ஆகவே எனக்கு உதவுங்கள் என கழுத்தில் வாசகம் பொருந்திய அட்டையை அணிந்த படி பெரு நாட்டின் தெருவில் சுற்றித்திரிந்த நாய் பலரின் பரிதாபத்தை பெற்றுள்ளது.

பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் உள்ள கடைவீதி ஒன்று உள்ளது. அதே பகுதியில் கடை வைத்திருந்த ஒருவர் செஸ்டர் என்ற நாயை வளர்த்து வந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துள்ளார். இதனால் ஆதரவின்றி அந்த நாய் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளது.

இதைக்கண்ட அங்குள்ள வணிகர்கள் ”தனது எஜமானி, கொரோனா காரணமாக இறந்துவிட்டதால் தான் அனாதையாகிவிட்டதாகவும், அதனால் தன்னை உதாசீனப்படுத்தாமல் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஒரு அட்டையில் எழுதி அதை அந்த நாயின் கழுத்தில் அணிவித்துள்ளனர் இதையடுத்து அந்த அட்டையுடன் கடைவீதியில் பரிதாபமாக சுற்றித்திரிந்த அந்த நாயை கண்ட சிலர், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன்னர்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, அப்பகுதியில் நாய் பிரபலமானது. இதையடுத்து விலங்கியல் பாதுகாவலர்களால் மீட்கப்பட்டு, அந்த நாய் விலங்கியல் மீட்பு காப்பகத்தில் விடப்பட்டது. இதனிடையே, சமூக வலைதளங்களில் இந்த நாயின் வீடியோவை கண்ட ஒருவர் அந்த நாயை வளர்க்க முன்வந்துள்ளாராம்.

எஸ்.முத்துக்குமார்