×

பிரதமர் சிறை பிடிப்பு… ராணுவத்தின் பிடியில் நாடு! எங்கு நடந்தது இந்த அதிரடி

ராணுவத்தினர் தம் ஆளுகைக்குள் நாட்டைக் கொண்டு வருவது புதிய விஷயமல்ல. நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இப்படி நடந்திருக்கிறது. அப்படியான ஓர் அதிரடி மாற்றம் இன்னொரு நாட்டிலும் தற்போது நடந்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சின்ன நாடு மாலி. சுமார் 12 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. சுமார் இரண்டரை கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் அதிபராக பபுபக்கர் கெய்ட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக மெய்கா பவ்பு சிசே தேர்வு
 

ராணுவத்தினர் தம் ஆளுகைக்குள் நாட்டைக் கொண்டு வருவது புதிய விஷயமல்ல. நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இப்படி நடந்திருக்கிறது. அப்படியான ஓர் அதிரடி மாற்றம் இன்னொரு நாட்டிலும் தற்போது நடந்திருக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சின்ன நாடு மாலி. சுமார் 12 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. சுமார் இரண்டரை கோடி மக்கள் வசிக்கின்றனர்.

இந்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் அதிபராக பபுபக்கர் கெய்ட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக மெய்கா பவ்பு சிசே தேர்வு செய்யபப்ட்டார்.

ஆட்சி சுமுகமாகச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென்று ராணுவத்தினர் பிரமரை சிறைப்பிடித்தனர்.

PC: Wikipedia

ராணுவத்தினரிடன் மணிக்கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. இறுதியாக, அதிபர் பபுபக்கர் கெய்ட்டா, தொலைக்காட்சியில் தோன்றி, தான் ராஜினாமா செய்ததிருப்பதையும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையும் நாட்டு மக்களிடையே அறிவித்தார்.

PC: Wikipedia

இந்தத் திடீர் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ராணுவ வீரர்கள் வலம் வந்ததிலிருந்தே மக்கள் ஓரளவுக்கு சூழலை புரிந்துகொண்டு விட்டனர்.

மாலி நாட்டு அதிபர் பிரான்ஸ் நாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை பதவி விலகச் சொல்லி போராட்டங்கள் நடந்தன. இந்த ராணுவப் புரட்சிக்கான பின்னணி அதுவாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Head image cradit : AFP