×

மீண்டும் பணி நீக்கத்தில் இறங்கிய மெட்டா நிறுவனம்!

 

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, 11,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அதுமட்டுமின்றி 4 மாதங்களில் மேலும் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்திருப்பது அங்கு பணிபுரிவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா - உக்கரைன் போர்ர் தாக்குதலால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.  இதன் எதிரொலியால், செலவீனங்களை குறைக்கும் விதமாக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு  நடவடிக்கையில் இறங்கிவிட்டன. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் நிறுவனமான மெட்டா, அமேசான் , பிரபல வீடியோ கான்பரன்ஸிங்  நிறுவனமான ஸூம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட் குறைப்பில் ஈடுபட்டன. வரும் காலங்களில் பணிநீக்கஙள் தொடரும் என்றும்  பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ் தற்போது அடுத்த ரவுண்ட் லே ஆஃப் செய்ய தயாராகிவிட்டது. அதன்படி கூடுதலாக சேர்க்கப்பட இருந்த 5 ஆயிரம் பணியிடங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது மெட்டா நிறுவனம் மீண்டும் 13 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணீநீக்கம் செய்யவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இன்ஜினியரிங் படிப்பு அல்லாத பணியாளர்கள் அதிகமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் மெட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அங்கு பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பணியாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.