×

’வட கொரிய அதிபர் நலமாக இருக்கிறார்!’ சொல்வது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் எடுத்த அதிரடி செய்திகளைப் பரபரப்பாக படித்து வந்த நிலைமை மாறி, அவர் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா என்பதைப் படிக்க வேண்டிய சூழல் மாறிவிட்டது வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், கடந்த சில மாதங்களாக கிம் ஜங் உன் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகவில்லை என்பதால், அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா இருப்பதாக செய்திகள் மீண்டும் உலா வந்தன. இந்தச் செய்தியை கி, ஜங் உன்னின் நெருங்கிய நட்பு
 

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் எடுத்த அதிரடி செய்திகளைப் பரபரப்பாக படித்து வந்த நிலைமை மாறி, அவர் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா என்பதைப் படிக்க வேண்டிய சூழல் மாறிவிட்டது

வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், கடந்த சில மாதங்களாக கிம் ஜங் உன் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகவில்லை என்பதால், அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா இருப்பதாக செய்திகள் மீண்டும் உலா வந்தன.

இந்தச் செய்தியை கி, ஜங் உன்னின் நெருங்கிய நட்பு வட்டமும் உறுதி செய்தி செய்தது. ஆனால், மீண்டும் அவர் இயல்பாக இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாயின.

சில மாதங்களுக்கு முன் வட கொரிய அதிரிபரின் அதிகாரங்கள் பலவற்றை அவரின் சகோதரி கிம்யோ ஜாங் -க்கு மாற்றியதை வைத்து ஒரு பத்திரிகையாளர் கிம் ஜங் உன் இறந்துவிட்டார் என்றே சொல்லி வந்தார்.

இந்நிலையில் வடகொரியாவில் வீசிய புயல் சேதங்களைப் பார்க்க கிம் ஜங் உன் வந்ததாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், கிம் ஜங் உன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நிருபிக்க வில்லை என்று சில நாடுகள் சொல்லி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கிம் பற்றிய ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘கிம் ஜங் உன் நலமோடு இருக்கிறார். எவரும் அவரை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் ட்விட், உலக மத்தியில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில் ட்ரம்பின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.