மெக்காவில் வைத்து நெற்றியில் முத்தமிட்டதால் மரண தண்டனையா?
சவூதி அரேபியாவில் இரண்டு வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தூக்கிலிடப்பட்டதாக சவூதி ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், அவர்களின் குற்றங்கள் குறித்த விவரங்கள் இல்லாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெற்றியில் முத்தமிட்டதற்காக மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுவதால் உலக அளவில் விவாதமாகியுள்ளது. அவர்களுக்கு அக்டோபர 14ஆம் தேதி ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கதேச அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வங்கதேச அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் எப்படியாவது உதவியிருக்க முடியும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
சவூதி அரேபியா, உலகில் மரண தண்டனையை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாகும். மனித உரிமைகள் கண்காணிப்பகம், 2025-ஆம் ஆண்டில் குறைந்தது 356 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2022-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில், மரண தண்டனை கொலை வழக்குகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தபோதிலும் இது நிகழ்ந்துள்ளது.