×

உயிர் பிரிந்தது.... பிரிட்டன் அரச குடும்பத்தினர் அதிர்ச்சி

 

ராணி எலிசபெத்தின் உறவினரை மணந்த பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் கென்ட் டச்சஸ் கேத்தரின், செப்டம்பர் 4, வியாழக்கிழமை காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. அவருக்கு வயது 92.


பிரிட்டன் அரச குடும்பத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனான கென்ட் டியூக் இளவரசர் எட்வர்டை மணந்தவர் கென்ட் டச்சஸ் கேத்தரின். இவர்  1994 இல் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். மதம் மாறிய அரச குடும்பத்தின் முதல் உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவருக்கு இசை மீது அலாதி பிரியம். செப்டம்பர் 8, 2022 அன்று ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் வாழும் மூத்த உறுப்பினராக இருந்த இவர், இன்று காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவருக்கு வயது 92.