×

அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக பதவி வகித்த கமலா ஹாரிஸ்

 


அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.

அமெரிக்க துணை அதிபர்  கமலா ஹாரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்.  இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  இதனால் அவர் வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமாகும் வரை தனது அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு  தற்காலிகமாக வழங்க அதிபர் ஜோ பைடன் முடிவெடுத்தார்.

இந்நிலையில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடம் பதவி வகித்தார்.  அதிபர் பைடனுக்கு மயக்க மருந்து தந்து,  மருத்துவ சோதனை நடந்ததால் கமலாவுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது.  அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்ட நிலையிலும்,  துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் இருக்கையில் அமரவில்லை.  இதை தொடர்ந்து வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் ஜோ பைடன் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.