×

சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது கார்த்திக் நடித்த “கைதி” திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் தான் என்று சொல்லித்தான் படத்தை விளம்பரமே செய்தார்கள். இதனால் இப்படம் வெற்றி பெறுமா? என பலரும் சந்தேகித்தனர். ஆனால் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்களை உடைத்தெறிந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி அடைந்தது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாறிய இந்த கைதி திரைப்படம், ஹிந்தியில் ரீமேக்
 

லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் தான் என்று சொல்லித்தான் படத்தை விளம்பரமே செய்தார்கள். இதனால் இப்படம் வெற்றி பெறுமா? என பலரும் சந்தேகித்தனர். ஆனால் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்களை உடைத்தெறிந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி அடைந்தது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாறிய இந்த கைதி திரைப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இந்த படம் நிச்சயமாக ஹிந்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என இப்படத்தின் தயாரிப்பாளர் உறுதியுடன் தெரிவித்தார். இந்த நிலையில் கார்த்திக் நடித்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு கைதி செல்கிறது. அதாவது, டொரன்டோவில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு கைதி திரைப்படம் தேர்வாகியுள்ளது.