×

ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுபவர் இவர்தான் – அமெரிக்க தேர்தல் நிலவரம்

அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்கள்தான் இடையில் உள்ளன. தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். துணை அதிபராகப் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்து. உலகம் முழுவதும் வரும் பாராட்டு மழையால் திணறி வருகிறார் கமலா ஹாரீஸ் இந்நிலையில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி
 

அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்கள்தான் இடையில் உள்ளன. தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.

துணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்து. உலகம் முழுவதும் வரும் பாராட்டு மழையால் திணறி வருகிறார் கமலா ஹாரீஸ்

இந்நிலையில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்ப்பில் போட்டியிடப்போவது ஜோ பிடன் என்பது பரவலாகத் தெரிந்த செய்திதான். ஆனால், அவரே வேட்பாளர் என ஜனநாயக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனநாயகக் கட்சியில் ஆன்லைன் மூலம் ஜோ பிடன் அமெரிக்க அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சியின் அறிவிப்பு பற்றி ஜோ பிடன் கூறுகையில், ‘இது என் வாழ்க்கையில் கிடைத்த ஆகப் பெரும் மரியாதையும் கெளரவமும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றி’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

கொரோனாவை எதிர்கொள்வதில் ட்ரம்ப் காட்டிய அலட்சியம் ஜோ பிடன் வெல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை நடந்த அவர் கட்சி வாக்கெடுப்பில் 79 சதவிகித வாக்குகள் ஜோ பிடனுக்கே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.