×

இரண்டாம் முறையாக நியூசிலாந்து பிரதமர் பதவியேற்றார் ஜெசிந்தா

நியூசிலாந்து நாட்டில் இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றார் ஜெசிந்தா ஆர்டர்ன். ஜெசிந்தா ஆட்ர்டென் உலகளவில் கவனம் ஈர்த்தவர். கொரோனா தொற்று உலகம் முழுவதுமே படாத பாடு படுத்தி வருகிறது. ஆனால், நியூசிலாந்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே உஷாரானவர். உடனடியாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, யாருக்கு கொரோனா தொற்று இருக்கிறதோ அவரைப் பற்றிய தகவல்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய வைத்தார். இதனால், அங்கு இப்போதுமே கொரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது. கொரோனா தொற்று இருந்ததால்,
 

நியூசிலாந்து நாட்டில் இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றார் ஜெசிந்தா ஆர்டர்ன். ஜெசிந்தா ஆட்ர்டென் உலகளவில் கவனம் ஈர்த்தவர். கொரோனா தொற்று உலகம் முழுவதுமே படாத பாடு படுத்தி வருகிறது. ஆனால், நியூசிலாந்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே உஷாரானவர்.

உடனடியாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, யாருக்கு கொரோனா தொற்று இருக்கிறதோ அவரைப் பற்றிய தகவல்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய வைத்தார். இதனால், அங்கு இப்போதுமே கொரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது.

கொரோனா தொற்று இருந்ததால், தேர்தலை உரிய நேரத்தில் நியூசிலாந்தில் நடத்த முடியவில்லை. ஓரிரு மாதங்கள் தேர்தலை ஒத்தி வைத்ததும் எதிர்கட்சிகள் ஜெசிந்தா மீது கடும் குற்றசாட்டை முன் வைத்தன. ஆனால், அவற்றையெல்லாம் பற்றி கவலை படாமல் நோய் பரவலைக் கட்டுப்படுத்தவே முழு முயற்சி எடுத்தார்.

அக்டோபர் 17-ம் தேதி நடந்த தேர்தலில் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரது அமைச்சரவையில் கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பிரியங்காவுக்கு முக்கியப் பொறுப்பு அளித்துள்ளார்.

தற்போது ஜெசிந்தா ஆர்டர்ன் முறைப்படி நியூசிலாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.