×

அமேசானில் கமலா ஹாரீஸை அவமதிக்கும் ஆடைகள் விற்பனையா?

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். ணை அதிபராகப் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்திருக்கிறார் ஜோ பிடன். இது பலருக்கும் ஆச்சர்யம். உலகின் பலமூலைகளிலிருந்தும் பலர் தங்களது பாராட்டுகளை கமலாவுக்குத் தெரிவித்து வருகிறார்கள்.
 

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

 ணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்திருக்கிறார் ஜோ பிடன். இது பலருக்கும் ஆச்சர்யம். உலகின் பலமூலைகளிலிருந்தும் பலர் தங்களது பாராட்டுகளை கமலாவுக்குத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, ஆசிய நாடுகளிலிருந்து கமலா ஹாரீஸுக்கு வாழ்த்துகளைப் பரிமாறி வருகிறார்கள்.

ஆனால், கமலா ஹாரீஸை அவமதிக்கும் வகையிலான சொற்களைத்  தாங்கிய ஆடைகள் அமேசானில் விற்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி.

தனிப்பட்ட முறையில் கமலாவைத் தாக்கியதை பலரும் கண்டித்து பதிவிட்டனர். பல ஊடகங்களில் இது செய்தியாக வெளியானது. இது பெரிய விஷயமாக மாறுவதை உணர்ந்த அமேசன், உடனடியாக அந்த விளம்பரத்தை நீக்குவதாகத் தெரிவித்துள்ளது.

தனிமனிதர்களை / சமூகத்தை அவமதிக்கும் வகையில் விற்பனை விதிகளை கடைப்பிடிக்காத வியாபாரிகளைக் கண்காணிக்கவும் அமேசான் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.