×

ஃபேஸ் புக்குடன் தகவல்கள் பகிரப்படுகிறதா? – வாட்ஸ் ஆப் விளக்கம்

தனிநபரின் செல்போன் விவரங்கள் பேஸ்புக்குடன் பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, ஃபேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது. வாட்ஸ் ஆப் குரூப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். பயனர்களின் அழைப்புகள், குறுந்தகவல் விவரங்களை சேமித்து வைக்க மாட்டோம். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன்
 

தனிநபரின் செல்போன் விவரங்கள் பேஸ்புக்குடன் பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, ஃபேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது. வாட்ஸ் ஆப் குரூப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். பயனர்களின் அழைப்புகள், குறுந்தகவல் விவரங்களை சேமித்து வைக்க மாட்டோம். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ் ஆப் குறித்து பல வதந்திகள் பரவுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுக்க தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் ஆப் தான். அதில் ப்ரைவசி பாலிசி மற்றும் சிக்னல் அப்டேட் அறிவிக்கப்பட்டிருப்பது பயனாளர்களை குழப்பமடையச் செய்துள்ளது. இதனை ஏற்காவிடில், வரும் 8ம் தேதி முதல் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வரும் நிலையில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த அப்டேட் இருக்கிறது.

இதனால், பயனாளர்களின் தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு பகிரப்படுமா? பிரைவசி பாதிக்கப்படுமா? என்ற கேள்விகள் தற்போது பேசு பொருளாகியிருக்கும் சூழலில், வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.