×

அமெரிக்க துணை அதிபருக்குப் போட்டியிடும் கமலா ஹாரீஸூக்கு இந்திரா நூயி வாழ்த்து

அமெரிக்காவின அடுத்த தேர்தலுக்கு நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் ஜோ பிடன். இந்நிலையில் ஜோ பிடன், யாரை துணை அதிபராகப் போட்டியிட அறிவிப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய கேள்வியாக இருந்து. ஜோ பிடன் எவரும் எதிர்பாராத வண்ணம்
 

அமெரிக்காவின அடுத்த தேர்தலுக்கு நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் ஜோ பிடன்.

JoeBiden and kamala harries PC: twitter

இந்நிலையில் ஜோ பிடன், யாரை துணை அதிபராகப் போட்டியிட அறிவிப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய கேள்வியாக இருந்து. ஜோ பிடன் எவரும் எதிர்பாராத வண்ணம் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்திருக்கிறார்.

கமலா கடந்த 1990   முதல் அரசியலில் முக்கியப் பணிகளை ஆற்றிவருகிறார். கடந்த அதிபர் தேர்தலில் இவரும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலிஃபோர்னியாவின் செனட்டராக தற்போது பதவி வகிக்கிறார்.

Indra Nooyi PC: Twitter

துணை அதிபருக்குப் போட்டியிடும் கமலா ஹாரீஸிக்கு ’பெப்சி’ யின் முன்னாள் சிஇஒ வும் சென்னையைச் சேர்ந்தவருமான இந்திரா நூயி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

’கமலா ஹாரீஸ் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறது. மிகுந்த அன்பும் புத்திசாலியும் கொண்ட கமலா அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு சிறப்பாகப் பணியாற்றுவார். கமலா ரொம்ப நல்ல தேர்வு’ என்பதாகக் கூறியுள்ளார் இந்திரா நூயி