×

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன. இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே கவலை அளிக்கும் செய்தி. ஆகஸ்ட் 12-ம் தேதி ரஷ்யா நாடு உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யவிருக்கிறது. அது முழு பலனை அளிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்கூட. ஆகஸ்ட் 09 – இன்றைய
 

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே கவலை அளிக்கும் செய்தி.

ஆகஸ்ட் 12-ம் தேதி ரஷ்யா நாடு உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யவிருக்கிறது. அது முழு பலனை அளிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்கூட.

ஆகஸ்ட் 09 – இன்றைய உலகளவில் கொரோனா நிலவரம் என்னவென்பதைப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 1 கோடியே 98 லடசத்து 6 ஆயிரத்து 285 பேர். இன்னும் நாளை இரண்டு கோடியை எட்டு விடும் எனக் கணிக்கிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 931 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 591 பேர். இறப்போர் எண்ணிக்கை முந்தைய வாரங்களோடு ஒப்பிட்டுகையில் குறைவு என்றாலும் இதுவும் கவலை அளிக்கும் எண்ணிக்கையே.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 53 ஆயிரத்து 763 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 51 லட்சத்து 49 ஆயிரத்து 723 பேரும், பிரேசில் நாட்டில் 30 லட்சத்து 13 ஆயிரத்து 369 பேரும் இந்தியாவில் 21 லட்சத்து 53 ஆயிரத்து 010 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒப்பிட்டளவில் முந்தைய வாரங்களோடு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கும் தகவல்களாகும்.