இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சரவை இன்று அமைகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து இலங்கை அதிபரும், ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்க, கடந்த 8ஆம் தேதி மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை பிரதமராக அவர் பதவியேற்றுக்கொள்வது இது நான்காவது முறையாகும். இதையடுத்து இன்று (12.8.2020) காலையில் கண்டியில் ராஜபக்சேவின் அமைச்சரவையினர் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.
Aug 12, 2020, 00:01 IST
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சரவை இன்று அமைகிறது.
கடந்த 5ஆம் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து இலங்கை அதிபரும், ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்க, கடந்த 8ஆம் தேதி மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை பிரதமராக அவர் பதவியேற்றுக்கொள்வது இது நான்காவது முறையாகும்.
இதையடுத்து இன்று (12.8.2020) காலையில் கண்டியில் ராஜபக்சேவின் அமைச்சரவையினர் பதவியேற்றுக்கொள்கிறார்கள். கோத்தபய ராஜபக்சே அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.