×

இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறும் பெண் எழுத்தாளர்

 

2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகளவில் மிக உயரிய பரிசாக கருதப்படுவது  நோபல் பரிசு.  ஒவ்வொரு ஆண்டும்  இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி ஆகிய பிரிவுகளுக்கு  நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  தலைசிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், தலைவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்..  அதாவது  ஒப்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கும்,  மனிதகுலத்திற்கு பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள், கருவிகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கும்  வழங்கப்படும் பரிசாக இது இருக்கிறது. இப்பரிசைப் பெறுபவர்கள் பெருமதிப்பு கொண்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.  


அந்தவகையில் தென்கொரிய பெண் எழுத்தாளரான ஹான் காங்-கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதை படைப்புக்காக ஹான் காங்-கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹான் காங்-ன் தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் என்படு குறிப்பிடதக்கது.