×

உலகின் நீளமான கால்களைக் கொண்டு கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இளம்பெண்!

சுமார் 135 செ.மீ நீளத்துடன் உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட 17வயது இளம்பெண் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் சிடார் என்னும் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் மேசி கர்ரின். இவருக்கு வயது 17. மேரியின் இடது கால் 135 சென்டி மீட்டரும் வலது கால் 134 சென்டி மீட்டரும் இருப்பதால் இவர் அடுத்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளார். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் எல்லாரும் சாதாரண உயரத்துடனே
 

சுமார் 135 செ.மீ நீளத்துடன் உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட 17வயது இளம்பெண் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் சிடார் என்னும் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் மேசி கர்ரின். இவருக்கு வயது 17. மேரியின் இடது கால் 135 சென்டி மீட்டரும் வலது கால் 134 சென்டி மீட்டரும் இருப்பதால் இவர் அடுத்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளார். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் எல்லாரும் சாதாரண உயரத்துடனே இருக்கும் நிலையில், மேரி மட்டும் அவர் குடும்பத்தில் மிக உயரமாக இருக்கிறார்.

அவரது கால்கள் மட்டும் சுமார் 1.5 அடி நீளம் இருப்பதால், அவரது உயரத்தை ஸ்டூல் போட்டு நின்றால் தான் எட்ட முடிகிறதாம். பள்ளியில் கைப்பந்து விளையாடும் போது எனது உயரம் சாதகமாக இருப்பதாக கூறும் மேரி, வீடுகளில் நுழைவது, உயரத்துக்கு ஏற்றாற்போல துணிகள் எடுப்பதில் சிரமத்தை சந்திப்பதாக கூறியுள்ளார். மேலும் மேரி டிக்டாக்கில் மிக பிரபலமாக இருப்பதோடு, உலகின் உயரமான மாடல் என்றும் புகழ் பெறவிருக்கிறார்.