×

திடீரென மேடையில் ஏறி... ஆளுநரின் கன்னத்தில் அறைந்த நபர்; பரபரப்பு சம்பவம்!
 

 

ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழாவில் ஒரு நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய ஒரு நபர் ஆளுநர் அபிதினின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேடையில் ஏறிய பாதுகாவலர்கள் அந்த நபரைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

ஆளுநர் அபிதினை கன்னத்தில் அறைந்த நபரின் பெயர் அயுப் அலிஜாதே. திடீரென மேடையில் ஏறி ஏன் அவர் இவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள், அயுப் அலிஜாதேவின் மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்ததால் அந்த கோபத்தில் அவர் இருந்ததாக தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.