×

”முக கவசம் அணியாவிட்டால் சவப்பெட்டிக்குள் படுங்க”!-ஜகர்த்தாவில் நூதன தண்டனை!

முக கவசம் அணியாதவர்களை சில நிமிடங்களுக்கு சவப்பெட்டிக்குள் படுக்க வைக்கும் நூதன தண்டனை ஜகர்த்தாவில் வழங்கப்படுகிறது. இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு அபராதம் அல்லது சமூக பணிகளை செய்யுமாறு தண்டனை வழங்கப்படுகிறது. அபராதம் கட்டவும், சுத்தப்படுத்தும் பணி செய்ய விரும்பாதவர்களுக்கு சில நிமிடங்களுக்கு சவப்பெட்டிக்குள் படுத்து கிடக்கும் நூதன தண்டனை
 

முக கவசம் அணியாதவர்களை சில நிமிடங்களுக்கு சவப்பெட்டிக்குள் படுக்க வைக்கும் நூதன தண்டனை ஜகர்த்தாவில் வழங்கப்படுகிறது.

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு அபராதம் அல்லது சமூக பணிகளை செய்யுமாறு தண்டனை வழங்கப்படுகிறது.

அபராதம் கட்டவும், சுத்தப்படுத்தும் பணி செய்ய விரும்பாதவர்களுக்கு சில நிமிடங்களுக்கு சவப்பெட்டிக்குள் படுத்து கிடக்கும் நூதன தண்டனை வழங்கப்படுகிறது. முக கவசம் அணியாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்த்தும்விதமாக இந்த நூதன தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க அபராதம் மற்றும் சுத்தப்பணி செய்வதற்கு சவப்பெட்டியில் படுப்பது ரொம்ப சுலபம் என பலரும் சவப்பெட்டி தண்டனையை விரும்பி ஏற்றுவிடுகிறார்களாம். இந்நிலையில், சவப்பெட்டிக்குள் பலரும் படுத்து செல்வதாலும் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அந்த நூதன தண்டனை விலக்கிக்கொள்ளப்பட உள்ளது.

-S.முத்துக்குமார்