×

நண்பர்கள், உறவினர்களின் கட் -அவுட் புடை சூழ திருமணம்! ஊரடங்கு கட்டுப்பாட்டினால் நடந்த விநோதம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் முக்கிய நிகழ்ச்சிகள் தடைபட்டு போய்விட்டன. அப்படியே நடந்தாலும், கட்டுப்பாட்டு விதிகளின்படியே நடந்தன. திருமணம் என்றால் சாதி சனம், சொந்த பந்தம் எல்லாம் திரண்டு வரும். ஆனால், இந்த கொரோனா காலத்தில் நடந்த திருமணங்களில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில இடங்களில் கோவில் முன்பாக மணமகனும் மணமகளும் மட்டுமே நின்று தாலி கட்டிக்கொண்டு போன தும் உண்டு. பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாததால் மணமகன்,
 

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் முக்கிய நிகழ்ச்சிகள் தடைபட்டு போய்விட்டன. அப்படியே நடந்தாலும், கட்டுப்பாட்டு விதிகளின்படியே நடந்தன.

திருமணம் என்றால் சாதி சனம், சொந்த பந்தம் எல்லாம் திரண்டு வரும். ஆனால், இந்த கொரோனா காலத்தில் நடந்த திருமணங்களில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில இடங்களில் கோவில் முன்பாக மணமகனும் மணமகளும் மட்டுமே நின்று தாலி கட்டிக்கொண்டு போன தும் உண்டு. பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாததால் மணமகன், மணமகள் கூடுவதற்கே பெரும் பாடாக இருந்தது.

சொந்த பந்தம் முன்னால் திருமணத்தை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் இருப்பவர்கள் எல்லாம் பின்னாளில் தனியாக ஒரு விழா எடுத்து எல்லோரையும் வரவழைக்கலாம் என்று ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.

இன்னமும் கொரோனா காலமாகத்தான் இருக்கிறது. எப்போது இது சரியாகுமோ என்று யாருக்கும் தெரியவில்லை.
அதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், அதே நேரத்தில் சொந்த பந்தங்கள் எல்லாம் சூழ இருப்பது மாதிரி ஒரு ஏற்பாட்டுடன் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

இது நடந்தது பிரிட்டனில். ரோமானீ – சாம் ரொண்டேயூ ஸ்மித் திருமணத்தில் தான் இந்த வித்தியாசமான நிகழ்வு நடந்திருக்கிறது.

பிரிட்டனின் ஊரடங்கு விதிகளின்படி 14 மட்டுமே திருமணத்தில் பங்கேற்க முடியும் என்பதால், நண்பர்கள், உறவினர்களை எல்லாம் கட் -அவுட் ஆக தயாரித்து வைத்து, அந்த கட் அவுட்களின் முன்பாக நின்று திருமணம் செய்துகொண்டு மகிழ்ந்ருக்கிறார்கள்.

இந்த திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி, வாழ்த்துக்களை குவித்து வருகிறது.