×

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கஞ்சா, பீர் இலவசம்… ரக ரகமான ஆபர்கள் அறிவிப்பு!

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இன்னொரு லாக்டவுன் போட்டால் பொருளாதாரம் கடுமையாக் அடிவாங்கும் என்பதால் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்று உலகின் பல நாடுகள் தீர்மானமாக உள்ளன. மக்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பது போல உலக நாடுகளிடையேயும் இந்த வேறுபாடு இருக்கிறது. ஒருபுறம் கொரோனா தடுப்பூசியை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகள். மறுபுறம் அளவுக்கு அதிகமாகவும் வித விதமாகவும் தடுப்பூசி வைத்திருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்களைக்
 

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இன்னொரு லாக்டவுன் போட்டால் பொருளாதாரம் கடுமையாக் அடிவாங்கும் என்பதால் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்று உலகின் பல நாடுகள் தீர்மானமாக உள்ளன. மக்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பது போல உலக நாடுகளிடையேயும் இந்த வேறுபாடு இருக்கிறது.

ஒருபுறம் கொரோனா தடுப்பூசியை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகள். மறுபுறம் அளவுக்கு அதிகமாகவும் வித விதமாகவும் தடுப்பூசி வைத்திருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்களைக் கொண்டிருக்கும் பணக்கார நாடுகள். இருப்பினும் பணக்கார நாடுகளிலிருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து ஏழை நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் சீரிய முயற்சியில் ஐநா இறங்கியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

சீனா, அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலுள்ள அரசுகளும் தனியார் நிறுவனங்களும் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக ரகரகமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகின்றன. உணவகங்களில் இலவச உணவு, மதுபானக் கடைகளில் இலவசமாக பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் பார்களில் கஞ்சா இலவசமாக கொடுக்கப்படுகிறதாம்.

உலக நாடுகள் ஒரு திசையில் போனால் சீனா வேறு ஒரு திசையில் பயணிக்கும். இவ்விவகாரமும் அதற்கு விதிவிலக்கல்ல. தொற்று வீரியாமாக இருக்கும் முக்கிய நகரங்களில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஹெனான் மாகாண அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் குழந்தைகளின் கல்வி, சொந்தமான வீடுகளைப் பறித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குப் பயந்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் (சைலன்ஸ் என்பதைக் கூட சத்தமா தான சொல்ல வேண்டியிருக்கு).

இந்தியாவில் இதற்கான முன்னெடுப்புகள் எதுவும் இல்லை. யாரும் ஆபர்கள் அறிவிப்பது இல்லை. கொரோனா தொற்று பரவுகிறது; லாக்டவுன் போடப் போகிறார்கள் என்று பயம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். நேற்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, முழு ஊரடங்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விட்டார். ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தலாம் என யோசனை வழங்கியிருக்கிறார். ஹ்க்ம்ம்ம்….!