×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமின்!

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கியது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), செவ்வாய் கிழமை ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக  இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.  அப்போது அவரை சுற்றி வளைத்த  துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இம்ரான்கான் ஊழல் செய்ததில் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.  இதற்கிடையே  நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது, துணை ராணுவத்தினர் கைது செய்த விதம் விவாதப்பொருளானது. இஸ்லாமாபாத்  உயர்நீதிமன்றம் இதற்கு கண்டனத்தைப் பதிவு செய்தது. 

அத்துடன் இம்ரான்கான் மீதான வழக்குகளை நீதிபதி முகமது பஷீர் நேற்று முன் தினம் விசாரித்தார்.  அப்போது இம்ரான் கானை 8 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.  இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இம்ரான் கைது செய்யப்பட்து சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் இம்ரான்கானை உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், இம்ரான் கான் கைது செல்லாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.  

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கியது. அல் காதிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வாரம் ஜாமீன் வழங்கியது.