×

அமெரிக்காவின் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் – ஜோ பிடன் அதிரடி

By subas Chandra boseபர,பரப்பான அமெரிக்க தேர்தல் முடிவடைந்து, 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் வருகிற 2021- ஜனவரி 20-ம் தேதி பொற்றுப்பேற்க உள்ளார்.அவரது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய முக்கிய தலைவர்கள் யார்?யார்? என்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஜோ பிடன் பல முடிவுகளை எடுத்து வைத்துள்ளார். அதன்படி அமெரிக்காவில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்?யார்? இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவலல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க அமைச்சரவையின் முக்கிய பதவிகளில்
 

By subas Chandra bose
பர,பரப்பான அமெரிக்க தேர்தல் முடிவடைந்து, 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் வருகிற 2021- ஜனவரி 20-ம் தேதி பொற்றுப்பேற்க உள்ளார்.அவரது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய முக்கிய தலைவர்கள் யார்?யார்? என்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஜோ பிடன் பல முடிவுகளை எடுத்து வைத்துள்ளார்.

அதன்படி அமெரிக்காவில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்?யார்? இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவலல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அமைச்சரவையின் முக்கிய பதவிகளில் முதன்மை இடம் வகிப்பது வெளி விவகாரத் துறை ஆகும். தற்போது 55 வயதாகும் சூசன் ரைஸ் இந்தப் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிகிறது.இவர் ஏற்கெனவே ஜோ பைடனுடன் இணைந்து அரசியல் களம் கண்டவர். மிகவும் நெருக்கமானவரும் கூட.. .இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராகவும்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர். இவர் தவிர அந்தோணி பிளிங்கன், வில்லியம் பர்ன்ஸ், கிறிஸ் கூன்ஸ் கிறிஸ் மர்பி அந்தோணி பிளிங்கன் ஆகியோரது பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரை பாதுகாப்பு அமைச்சராக பெண்கள் யாருக்கும் பொறுப்பு தரப்படவில்லை. அந்த வகையில் ஜோ பிடன் இதில் புரட்சி செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. 59 வயதாகும் மைக்கேல் ப்ளூர்னாய் என்ற பெண்மணியை பாதுகாப்பு அமைச்சராக ஜோ பிடன் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. இதே போல் டாமி டக்வொர்த் என்ற பெண்மணியின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இவர் 2004 ஈராக் போரில் ஒரு காலை இழந்தவர்.


அமெரிக்காவின் முக்கிய பதவிகளில் ஒன்று நிதித் துறை. இந்தத் துறையின் நிதியமைச்சராக லெயில் பிரைனார்டு என்பவர் பெயர் பரிசீலனையில் உள்ளது இவர் ஒரு பெண்மணி. ஜெர்மனியை பூர்வீகமாக கொண்டவர். 58 வயதாகும் இவர் அமெரிக்காவின் பிரபலமான பொருளாதார நிபுணர் ஆவார்.
சட்ட அமைச்சராக டக் ஜோன்ஸ் என்பவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இவருக்கு 66 வயதாகிறது இவர். பிடனுடன் நெருக்கமானவர்